பொங்கல் பண்டிகையையொட்டு தொடர் விடுமுறை தினங்கள் என்பதால் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரி கடற்கரையில் நாளை ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்களிலும் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8 மணி முதல் நாள் 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் படகு போக்குவரத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெறும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
0 Comments