சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு என்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் மனுவுக்கு வருகிற 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் பொதுச்செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்ய அதிகாரம் கிடையாது என்று கூறி எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது நீதிமன்றம் அதனை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது.
0 Comments