மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-
உலக தமிழர்களின் ஒப்பற்ற நன்னாளாம் தமிழர் திரு நாளில் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு நல்ல சிந்தனைகளை மனதில் தேக்கி மகிழ்வுடன் தமிழர் திருநாளை கொண்டாடும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக இனிய நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
இந்த நாளில் உழவர் பெருமக்களையும் போற்றி இயற்கைக்கு நன்றி கூறுவதோடு நம் உழவு தொழிலுக்கு உறுதுனையாக இருக்கும் கால் நடைகளுக்கும் உற்றார் உறவினர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் இந்த தமிழர் திரு நாளில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பறிமாறி கொள்வார்கள்.இந்த நாளிலில் வறுமை நீங்கி சமத்துவம் தழைத்தோங்கட்டும் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
0 Comments