மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹனி ரோஸ். இவர் கடந்த 2005ல் வெளியான ‘பாய் பிரண்ட்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தொழிலதிபர் ஒருவர் இவரை நிகழ்வு ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அந்த நிகழ்விற்கு அவர் செல்லாததால் தொழிலதிபர் தொடர்ந்து தன் மீது இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பொது தளத்தில் பயன்படுத்தி வருவதாகவும் இது குறித்து யாரும் அவரிடம் கேட்கவில்லை எனவும் ஹனி ரோஸ் முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பார்த்த 30க்கும் மேற்பட்டோர் முகநூலில் ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த ஹனி ரோஸ் கொச்சி நடிகர்கள் சங்கம் மற்றும் எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் அளித்தார்.
இந்த புகாரின் பெயரில் 27 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து கும்மளம் பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் முதலாவதாக கைது செய்யப்பட்டார். மேலும் பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூர் இன்று (ஜனவரி 8) வயநாட்டில் உள்ள அவருக்கு சொந்தமான ரிசார்ட்டில் இருந்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை காவல் துறையினர் எர்ணாகுளம் அழைத்து சென்றனர்.
0 Comments