கடலூர் மாவட்டத்தில் இளவரசி (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போலீஸ் எஸ்ஐ. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கலைவேந்தன் (36) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் ஒரு தனியார் பவர் பிளான்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று மதியம் உறவினர் ஒருவரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
இவர்கள் சித்தலபாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு அரசு பேருந்து எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இவர்களுடைய சடலங்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் அதனை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது வேதனைக்குரியதாக இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments