நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

 


நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். நேற்று தூத்துக்குடி மாவட்ட செயலாளர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 32 நிர்வாகிகள் விலகினர். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் மகாதேவன் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன விடுதலை அரசியல் என்று நான் இது நாள் வரை நான் பயணித்து வந்த 10 ஆண்டுகளுக்கு மேலான இனிமையான பயணத்தை முடித்துக் கொள்கிறேன். இன்றோடு நான் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுகிறேன். மேலும் இதனால் வரையிலும் உடன் பயணித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments