கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைககளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கவரப்பேட்டையில் துவக்கி வைத்தார்


கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 62,889 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 118 ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை வழங்கும் பணியின் துவக்க விழா கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ராஜா தெருவில் உள்ள ரேஷன் கடையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் தலைமை தாங்கி ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். 

விழாவிற்கு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே. ஆனந்தகுமார், கீழ் முதலமைச்சர் முன்னாள் தலைவரும் திமுக நிர்வாகியுமான கே.ஜி.நமச்சிவாயம்,

முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும் திமுக ஒன்றிய துணை செயலாளர் ஆன கே.இ.திருமலை, மாவட்ட கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ஆனந்தன், திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் எம்.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொங்கல் தொகுப்பினை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே கோவிந்தராஜன் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை வழங்காமல் தமிழகத்தை ஏமாற்றி வருவதால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால்தான் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகையை தமிழக அரசால் வழங்க இயங்கவில்லை என்று கூறினார்.


தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜியிடம் அனைத்து ரேஷன் கடைகளிலும் அனைத்து ரேஷன் அட்டதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை காலதாமதமின்றி வழங்க ஆலோசனை வழங்கினார்.இந்த நிகழ்வில் திமுக மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments