• Breaking News

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்சார கார், ஸ்கூட்டர்- சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி


    ஈரோடு மாவட்டம்,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் சைக்கிள் பம்ப் சின்னத்தில் போட்டியிடும்  சுயேட்சை வேட்பாளர் டாக்டர்.செல்ல குமாரசாமி தனது தேர்தல் அறிக்கையாக 82 வாக்குறுதிகள் அளித்துள்ளார். அதில் ஒரு வாக்குறுதியான, இந்த திட்டம் ஒரு மின்சார கார் மற்றும் ஒரு மின்சார ஸ்கூட்டர் தேவை உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருந்தும் என்றும், www.eec98.in  என்ற இணைய தளத்தில் உங்கள் குடும்ப தலைவர் அல்லது தலைவி பெயரில் கட்டணம் இல்லா முன்பதிவு உடனடியாக செய்து கொள்ளவும் என்றும் பெயர் & கைபேசி எண் அவசியம், வாக்காளர் அட்டை எண் இப்போது பதிய கட்டாயமில்லை சப்மிட் செய்தவுடன் உடனடியாக உங்களுக்கு ஒரு டோக்கன் எண்ணும், உங்கள் பெயரில் ஒரு பரிந்துரை இணைப்பு   கொடுக்கப்படும்அவ்விரண்டையும் ஸ்க்ரீன் ஷாட் செய்து வைத்துக் கொள்ளவும்,நீங்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அல்லாதவராக இருந்தாலும் பதிவு செய்து கொள்ளவும், உங்களுக்கு தெரிந்த அனைத்து ஈரோடு கிழக்கு தொகுதி குடும்ப அட்டைதரர்களுக்கும் இந்த இணைய முகவரி www.eec98.in ஐ பகிர்ந்து உடனடியாக பதிவு செய்ய சொல்லவும் என்றும் 

    இந்த வாய்ப்பு வரும் 04-02-2025 வரை மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கூட்டுறவே நாட்டுயர்வு என்று குறிப்பிட்டுள்ள இந்த வேட்பாளருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments