தஞ்சாவூரில் வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தொழில் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மேடையில், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர் செல்வம் குறிப்பினை எடுக்காமல் வந்துவிட்டார்.
பின்னர் அவர் அனைவருக்கும் வணக்கம் என்று உரையை துவங்கினார்.பின்னர் எதையோ தேடிய அவர், மேடையிலேயே, தனது உதவியாளரை நீ எருமை மாடா? பேப்பர் எங்கே? என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அமைச்சர் தனது உதவியாளரை ஒருமையில் பேசியது, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது. அமைச்சரின் பேச்சு பற்றி நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
0 Comments