• Breaking News

    ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் சென்னையில் கைது

     


    தமிழகத்தில், தடை செய்யப்பட்டு உள்ள ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இன்று(ஜன.28) அதிரடி சோதனை நடத்தினர்.இந் நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் அல்பாசிக் என்ற முக்கிய நபரை என்.ஐ.ஏ., குழுவினர் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அல்பாசிக், மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாசலைச் சேர்ந்தவர். அவர், சென்னையில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து கொண்டே வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் ஐ.எஸ்., இயக்கத்துக்கு ஆள் சேர்க்க மூளைச்சலவை செய்தது தெரிய வந்தது.

    No comments