மீஞ்சூர்: தேவதானம் பகுதியில் உள்ள ரங்கநாதர் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ் சூர் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட காணிப்பாக்கம் தேவதானம் பகுதியில் புகழ்பெற்றசுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய் ந்த ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ அரங் கநாதர் பெருமாள் கோவில்உள்ளது. இக்கோவிலில் பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய தின ங்களில் ஏராள மான பக்தர்கள் நேரில்வந்து ரங்கநாத பெருமாள் தரிச னம் செய்வது வழக்கம்.

 இதனையடுத்து முக்கிய தினங்களில் கோவில் சன்னதி விடியற் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் நடைபெற்று வருகின்றனர். அதன்படி நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தை யொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விடியற்காலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று நடைபெற்ற சுவாமி தரிசனத்தில் காணிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கா.சு ஜெகதீசன் ஏற்பாட்டில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமா ன பி.டி. பானு பிரசாத் குடும்பத்துடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர் இதில் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், முன்னாள் எம்எல்ஏ கே.பி.கே. சேகர், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Post a Comment

0 Comments