அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது யார் அந்த சார் என்று கேட்டு சட்டசபையில் அவர்கள் போராட்டம் நடத்தியதால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று இரண்டாம் நாளாக சட்டசபை கூட்டம் நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை.
அதாவது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சட்டசபை நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ஓய்வில் இருக்கிறார். மேலும் அவரை அதிமுக மூத்த தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.
0 Comments