தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையா..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கட்சி சரமாரி கேள்வி

 


அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, 'எதற்காககவும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம். அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுவதா?' என அமைச்சர் மகேஷ் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், மீண்டும் 'தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்திவீர்களா நீங்கள்?' என முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:

சாதாரணமாக ஒரு கிராமத்தில் பட்டா கேட்டு இயக்கம் நடத்தினால் கூட, போலீசார் வழக்கு போடுகிறார்கள். ஒரு சிறப்புரை கூட்டம் என்று சொன்னால் கூட போலீசார் வழக்கு போடுகிறார்கள். ஒரு ஆர்ப்பாட்டம் என்று சொன்னால், ஒரு ஊர்வலம் என்று சொன்னால், ஒரு போராட்டம் என்று சொன்னால், போலீசார் வழக்கு போடுகிறார்கள்.நான் கேட்கிறேன். முதல்வர் ஸ்டாலின் அவர்களை கேட்க விரும்புகிறேன். தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்துவீர்களா நீங்கள்? எப்படி இப்படி போலீசார் கட்டுப்படாமல் செயல்படுகின்றனர்? தமிழகத்தில் ஊர்வலம் நடத்த கூடாதா? தமிழகத்தில் மக்கள் இயக்கங்கள் நடத்தக் கூடாதா? பாதிக்கப்பட்ட மனிதன் தனது உரிமைக்காக போராட கூடாதா?

ஆர்ப்பாட்டம் நடந்தால் அதை அனுமதி ரத்து செய்து, கைது செய்து முடக்கி விட முடியுமா? சீப்பை ஒளித்து விடுவதனாலே கல்யாணத்தை நிறுத்தி விட முடியுமா? இவ்வாறு அவர் பேசினார்.ஒரே கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுப்பிய கேள்வி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Post a Comment

0 Comments