நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரியார் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு கண்டனங்கள் என்பது குவிந்து வருகிறது. அதாவது சீமான் பாலியல் இச்சை வரும்போது தாய் மகளாக இருந்தாலும் சரி சகோதரியாக இருந்தாலும் சரி அவர்களுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று பெரியார் சொன்னதாக கூறினார்.
அதோடு சமூக நீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தமில்லை எனவும் மது குடிக்காதே என்று சொல்வதும் கட்டிய மனைவியுடன் படுக்காத என்று சொல்வதும் சமம் என்று சொன்னவர் பெரியார் என்றும் அவர் பேசியது எல்லாம் பெண்ணுரிமையா என்றும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தார்.
தற்போது இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் சீமானுக்கு கண்டனங்கள் குவிந்து வருவதால் அவருடைய வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அதாவது தேவையில்லாத மோதல்களை தடுக்க வேண்டும் என்பதால் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சீமானுக்கு திமுகவினர் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
0 Comments