ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டி செவியூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு உதவி மின் பொறியாளர் என்.பி.கீதா தலைமையேற்றார். முகவர் முதல் நிலை ஆர்.கருப்புசாமி முன்னிலை வகித்தார். மேலும் இவ்விழாவில் முகவர் முதல் நிலை கே.லோகநாதன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.அதைதொடர்ந்து பள்ளி மாணவ , மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments