ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அம்மாபேட்டை வடக்கு ஒன்றியம் , வெள்ளி திருப்பூர் ஊராட்சி , ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆலாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்தமருத்துவ முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
முகாமில் சிறப்புரை நிகழ்த்திய சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதல்வர் ஏழை ஏளிய மக்களின் நலன் கருதி மக்களை தேடி மருத்துவம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் செயல்படுத்தி வருகிறார் அனைத்து ஏழை மக்களும் பயன்பெற வேண்டும் என கேட்டு மருத்துவ முகாமில் நோயாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இம்முகாமில் காப்பீட்டு இலவச மருத்துவம், ஈசிஜி, சக்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் சிகிச்சை, மகப்பேறு மருத்துவ பரிசோதனை, எலும்பு முறிவு, காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மேல்சிகிச்சை தேவைபடும் நிலையில்,அந்தியூர் அரசு மருத்துவமனைக்கும்,பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கும் அனுப்பி வைத்திட மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் இந்த முகாமில் 30வகையான இரத்தப்பரிசோதனைகளும், குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும், நாய்கடி தடுப்பூசிகளும் இந்த முகாமில் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ரெட்டிபாளையம்,வெள்ளித்திருப்பூர், சனிச்சந்தை, கொமராயனூர், முரளி , புதூர், ஆலாம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களை பரிசோதனை செய்து கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்றுக் கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் வழங்கினார்.
இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் ,ஒன்றிய செயலாளர் சரவணன் ,ஒன்றிய துணை செயலாளர் கண்ணுச்சாமி, பழனிச்சாமி, ராமசாமி , மணிகண்டன் , தங்கவேலு , தர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments