முதலமைச்சர் பெயரில் 'ரீசார்ஜ்' அறிவிப்பு.... சைபர் கிரைம் எச்சரிக்கை

 


புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும், 3 மாத 'ரீசார்ஜ்', வழங்க இருப்பதாக சமூக வலைதளங்களில், 'இணைய லிங்க்'குடன் கூடிய தகவல் பரவி வருகிறது. 'இதுபோன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம்' என, சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரிலும், மக்களை ஈர்க்கும் விளம்பரங்கள் வாயிலாக இணைய 'லிங்க்' அனுப்பும் சைபர் கிரைம் குற்றவாளிகள், அந்த 'லிங்க்' வாயிலாக உள் நுழையும் பொது மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை களவாடி விடுகின்றனர்.

சமீபத்தில், பிரமதர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய அரசு திட்டங்களை குறிப்பிட்டும் இதபோன்ற மோசடிகள் நடந்து வருகிறது. தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் பெயரிலும் ஒரு குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில், 'புத்தாண்டு ரீசார்ஜ் சலுகை' என்ற தலைப்புடன், 'புத்தாண்டையொட்டி ஸ்டாலின் அனைவருக்கும், 2 மாத ரீசார்ஜ், 749 ரூபாய் முற்றிலும் இலவசம் எனக்குறிப்பிட்டு, ஒரு 'இணைய லிங்க்' வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற 'லிங்க்'கில் நுழைந்தால், அந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அத்தகைய விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்; கவனமுடன் இருக்க வேண்டும்' என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments