• Breaking News

    ஈரோடு கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் அகற்ற வழிவகை செய்யப்படும் - சுயேட்சை வேட்பாளர் வாக்குறுதி


     ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் சைக்கிள் பம்ப் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் டாக்டர்.செல்வகுமாரசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் இல்லாத தொகுதியாக அமைக்க வழிவகை செய்யப்படும், ஈரோட்டில் உள்ள அனைத்து காய்கறி மார்க்கெட்டை முற்றிலுமாக சுத்தம் மற்றும் சுகாதாரமான வகையில் நவீன முறையில் மாற்றி அமைக்க ஆவண செய்யப்படும், 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் ஈரோட்டில் இருந்து வீரர்கள் பங்கேற்க 140க்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்க ஈரோடு ஒலிம்பிக் அகாடமி அமைய ஆவணம் செய்யப்படும், வார்டு தோறும் நடமாடும் ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்க வழிவகை செய்யப்படும், வெறி நாய் கடியில் இருந்து மக்களை காக்க செல்ல பிராணிகள் கணக்கெடுப்பு எடுக்கப்படும், ஈரோடு நவீன திரைப்படக் கல்லூரி அமைக்க ஆவணம் செய்யப்படும், இந்தியாவின் புற்றுநோய் தலைநகரமாக உள்ள ஈரோட்டில் மக்களின் உயிர்காக்க பல்நோக்கு புற்றுநோய் மருத்துவ மையம் அமைய ஆவணம் செய்யப்படும் என்பது போன்ற 82 வாக்குறுதிகளை அளித்துள்ளார். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments