ஈரோடு மாவட்டம் , அந்தியூர் ஒன்றியம் , சந்திபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் பூவழகி தலைமையில் 1வது வகுப்பு முதல் 8வது வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு அந்தியூர் போக்குவரத்து காவல்துறை காவல் ஆய்வாளர் கஸ்தூரி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு குழந்தைகள் சாலையில் செல்லும் போது ஒரமாக செல்ல வேண்டும், முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எதுவும் வாங்க கூடாது. 18 வயது பூர்த்தி அடையாமல் வாகனங்கள் ஒட்டகூடாது.பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்ட கூடாது. குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது. பஸ்ஸில் பயணம் செய்யும் போது படியில் நின்று பயணம் செய்ய கூடாது. குழந்தைகளுக்கு ஹெல்ப் லைன் நம்பர் பற்றி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments