தென்காசி: போலீசாரை அரிவாளால் வெட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி

 



தென்காசியில் சரித்திர பதிவேடு குற்றவாளி லெனின். இவர் சங்கரன்கோவிலில் உள்ள கருத்தானூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் லெனின் விவரங்களை சேகரிக்க காவலர் மாரி ராஜா என்பவர் இன்று சென்றார்.

அப்போது மாரி ராஜாவை லெனின் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் வெட்டு காயங்களுடன் மாரி ராஜா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் தற்போது லெனினை காவல்துறையினர் ‌ வலைவீசி தேடி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments