சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பலகாரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளது. இந்த விவகாரத்தில் அந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர் தான் மற்ற இருவரையும் அழைத்து சென்ற மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றது தெரிய வந்தது.
இந்நிலையில் தற்போது சென்னை ஐஐடியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ஐஐடியில் டீ குடிக்க கேண்டீன்க்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் கேண்டீனில் வேலை செய்யும் ஊழியர் ஆன ஸ்ரீராம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments