நேற்று நடைபெற்ற சட்டமன்ற 2025- ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் நடவடிக்கையை கண்டித்தும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் பாரதி ஜனதா கட்சியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்கள் எனக் கூறியும் இன்று தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் சின்னமனூரில் மாநில தீர்மானக் குழு உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் தேனி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரை கண்டித்தும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியை கண்டித்தும், பார்வை ஜனதா கட்சியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனீ தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments