தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் பகுதியில் உள்ள அகிலா ஹிட்ஸ் குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது. 2020 முதல் இயங்கி வரும் இந்த குடியிருப்பு பகுதியில் 300க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் மூன்று பகுதியாக உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொரு பகுதிகளும் 13 மாடிகளுக்கு மேல் உள்ளது.
இந்த தேர்தலுக்கு மதன் குமார் மற்றும் நரேஷ் இரண்டு நபர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 173 வாக்குகள் செலுத்தப்பட்டது அந்த வாக்கு அடிப்படையில் நரேஷ் 11 வாக்குகள் மற்றும் மதன்குமார் 162 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இவருக்கு குடியிருப்போர் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த தேர்தலை பொறுப்பாளராக பாஸ்கர் மற்றும் அவருக்குத் துணையாக வெங்கடகிருஷ்ணன் இருவரும் சிறப்பாக தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்கள் வழக்கறிஞர் ஹரிணிஷ் மற்றும் EXNORA சீதாராமன் ஆகியோர் பார்வையாளராக இருந்த தேர்தலை சிறப்பாக நடத்தினார்கள். இதில் காவல்துறை உதவியுடன் சிறப்பாக நடைபெற்றது. அதில் தொடர்ந்து வெற்றி பெற்ற மதன்குமார் அவர்களுக்கு பட்டாசுகள் வெடித்து கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அகிலா ஹிட்ஸ் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments