• Breaking News

    கோவை: காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்த வழக்கில் காதலனின் அண்ணன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

     


    கோவை மாவட்டம் வெள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ், 22. இதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த வர்ஷினி பிரியா, 17, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

    இதற்கு கனகராஜ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், 2019ம் ஆண்டு ஜூன் 28 தேதி, காதல் திருமண ஜோடியை, கனகராஜின் அண்ணன் வினோத் வெட்டிக் கொலை செய்தார்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வினோத், 25, அவரது நண்பர்கள் கந்தவேல், ஐயப்பன், சின்னராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு, கோவை எஸ்சி., எஸ்.டி., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    விசாரித்த சிறப்பு நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட வினோத்தை, குற்றவாளி என்று அறிவித்தார். மற்ற மூவரும் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளி வினோத்துக்கான தண்டனை வரும் ஜனவரி 29ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    No comments