ஜாதி பேச்சு..... சர்ச்சையில் சிக்கிய திராவிட மாடல் அமைச்சர் மூர்த்தி.....


 மதுரை தமுக்கம் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, சாதி ரீதியாக பேசியது தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,"ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது.தற்போது ஐந்து பேர் இறந்துபோனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. 

சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும், மேற்பட்டோர் இறந்து போனார்கள் என்பதை வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். நாயக்கர்கள் காலகட்டத்தில் கொள்ளையடித்துச் செல்லும்போது இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் முன்களத்தில் நின்று ஐந்தாயிரம், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.

இதேபோல்தான் உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிய கொண்டு வரப்படாமல் பின்தங்கிவிட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது" என்றார்.

Post a Comment

0 Comments