விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் பேசியதால் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதன் பிறகு அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நடிகர் விஜயை அவருடைய வீட்டில் கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக சந்தித்து பேசி உள்ளாராம். இதன் காரணமாக அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த ஜான் ஆரோக்கிய சாமியின் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆதவ் அர்ஜுனாவின் voice of common நிறுவனத்திற்கு தேர்தல் வியூக வகுப்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது.
அதன் பிறகு தமிழக வெற்றிக்கழகத்தில் இணையும் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை நடிகர் விஜய் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது புஸ்ஸி ஆனந்தை நடிகர் விஜய் வெளியே நிறுத்தி வைத்துவிட்டு பிற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது பேசும் பொருளாக மாறிய நிலையில் தற்போது துணை பொதுச்செயலாளர் பதவி ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்படுவது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறியுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
0 Comments