• Breaking News

    புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொலை வழக்கு..... கொலை செய்தவர்கள் பரபரப்பு வாக்குமூலம்



     புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வசித்து வருபவர் ஜெகபர் அலி முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். திருமயம் தெற்கு ஒன்றிய அதிமுக சிறுபான்மை நலப் பிரிவு செயலாளராகவும் தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும் இருந்தார். 

    சமூக ஆர்வலரான இவர் திருமயம் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அதை அடுத்து குவாரி அதிபர்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது ஆனால் அந்த அபராத தொகை வசூலிக்கப்படவில்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அபராத தொகை வசூலிக்காதது குறித்து மீண்டும் ஜகபர் அலி அரசு அதிகாரிகளை கேள்வி எழுப்பினார்.

    20000 டாரஸ் லாரி அளவுக்கு கனிம வளம் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் அனுமதியில்லாத இடத்தில் கொட்டப்பட்டுள்ளது என உதவி கலெக்டரிடம் புகார் மனுவை வழங்கினார். அந்த கனிம வளம் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் இரவோடு இரவாக அகற்றும் பணி நடைபெற்றது. கடந்த 13ஆம் தேதி கலெக்டரிடம் மனு அளித்தார்.

    நிருபர்களிடம் பேசுகையில் அரசு அலுவலர்களிடம் கனிம வள கொள்ளை குறித்து மனு அளித்து எந்தவித பயனும் இல்லை என மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் எனவும் பகிரங்கமாக தெரிவித்த நிலையில் கடந்த 17ஆம் தேதி ஜெகபர் அலி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பொழுது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அவரது மனைவி மரியம் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்த புகார் தெரிவித்து வந்ததால் அவரை திட்டம் தீட்டி கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசில் புகார் அளித்தார். பின்னர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு கல்குவாரி அதிபர்கள் சேர்ந்து திட்டமிட்டு அவரை லாரி ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. திருமயம் பகுதியைச் சேர்ந்த மினி லாரி உரிமையாளர் முருகானந்தம் போலீசில் சரணடைந்தார். ஜெகபர் அலியை கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தது.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் காசிநாதன் கைது செய்யப்பட்ட நிலையில் சமூக ஆர்வலரின் நடமாட்டத்தை கண்காணித்து முருகானந்தத்திற்கு தகவல் கொடுத்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவர் மீது திட்டம் தீட்டி மினி லாரியை மோத செய்தேன் முதல் முறை மோதியபோது படுகாயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்தார் அவர் பிழைத்து விடுவார் என கருதி இரண்டாவது முறை மீண்டும் மோதி அவரை கொலை செய்தேன் எனவும் பரபரப்பாக வாக்குமூலம் கிடைத்துள்ளது.

    No comments