ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும். இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நல குறைவால் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்ட நிலையில் 1,10,556 வாக்குகள் பெற்று 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். அந்த தேர்தலில் அதிமுக 43,981 வாக்குகளும், தேமுதிக 1115 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 7984 வாக்குகளும் பெற்றது.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தற்போது திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் நேரடி போட்டி உருவாகியுள்ளது. மற்ற மூன்று கட்சிகள் போட்டியிடாததால் அந்த வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் முதல் முறையாக திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி களத்தில் நேருக்கு நேர் மோதுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
0 Comments