கோயம்புத்தூரில் உடையாம் பாளையத்தில் ஒரு பீஃப் பிரியாணி கடை இருந்தது. இங்கு நேற்று பாஜக கட்சியில் பிரமுகர் பீஃப் பிரியாணி விற்பனை செய்ய கூடாது என்று அங்கு இருந்த கடைக்காரர்களை மிரட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலான நிலையில் கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது பீப் பிரியாணி விற்பனை செய்யக்கூடாது என்று மிரட்டிய பாஜக நிர்வாகியை காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும் அதன்படி கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது கிரிமினல் குற்ற எண்ணத்துடன் மிரட்டுதல், தனிநபர்களின் செயல்களை தடுத்தல், சட்டத்திற்கு புறம்பான செயல் மூலம் ஆத்திரமூட்டுதல், மதம், இனம் மற்றும் ஜாதி அடிப்படையில் பகைமை மூட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments