ஈரோடு மாவட்டம், கெம்பநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கெம்பநாயக்கன் பாளையம் பேரூராட்சி மன்ற தலைவரும் , கெம்பநாயக்கன் பாளையம் பேரூர் செயலாளர் கே. ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் கெம்பநாயக்கன் பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் பயில்கின்ற 182 குழந்தைகளுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம் பள்ளி வளர்ச்சிநிதியாக ரூபாய் 10.000/ பத்தாயிரம் வழங்கினார் .
மேலும் 182 பள்ளி குழந்தைகளுக்கு ( 1,00,000 ) ஒரு லட்சம் மதிப்புள்ள விளையாட்டு சீருடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி குழந்தைகளை வாழ்த்தினார். இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கே. கனி வரவேற்று நன்றி கூறினார் .
மேலும் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் கெம்பநாயக்கன்பாளையம் திமுக பேரூர் கழக அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் சுமார் 250 நபர்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி, சட்டை, மகளிர்க்கு சேலை, இனிப்பு, காரம் ஆகியவை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெள்ளியங்கிரி , சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ. ஏ. தேவராஜ் , சத்தியமூர்த்தி , கே.என்.பாளையம் பேரூர் அவைத் தலைவர் கே. பி. நாராயணன், கே.என்.பாளையம் பேரூர் துணை செயலாளர் ஆ. ரஜினி தம்பி , மாவட்ட பிரதிநிதி கே. எஸ். பெரியசாமி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் பெரியசாமி , சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள் டி .கே. ரமேஷ் குமார், எஸ் .ஆறுச்சாமி, கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சி. சந்திரன் , கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர் , இளைஞர் அணி , மாணவர் அணி, சார்பு அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments