• Breaking News

    ஆண்டிபட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற வெற்றுக்கால் சேவல் போட்டி நடைபெற்றது


    பொங்கல் விழா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி  மதுரை  திண்டுக்கல்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  பாண்டிச்சேரி  மாநிலத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட சண்டை  சேவல்களுடன் உரிமையாளர்கள் பங்கேற்பு.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் உங்கள் விழா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி தேனி திமுக தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக வெற்றுக்கால் சேவல் போட்டி நடைபெற்றது.போட்டிகளை ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்தார்.

    போட்டிகளில் தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி கேரளா ஆந்திராவில் இருந்தும் கருஞ்செவலை ,  யாகுத்து  தும்மர்  ஜாவா கதர் நூரி அப்ரோஸ் சீத்தா நாட்ரங்கு பீலா உள்ளிட்ட  600 க்கும் மேற்பட்ட சண்டை சேவல்கள் கலந்து கொண்டுள்ளன.ஒவ்வொரு  போட்டியும் 4 சுற்று போட்டிகளாக  நடைபெறுகின்றன.

    15 நிமிடம் சண்டை மற்றும் 15 நிமிடம் ஓய்வு என  நடைபெறுகின்றன.போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று சேவல்களுக்கு கோப்பைகளும் வெண்கல பாத்திரங்களும் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன.போட்டியிலே ஏராளமான சேவல்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆதரவாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கூடியதால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

    No comments