உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதவிக்காலம் முடிவு..... பொறுப்புகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்

 


தமிழகத்தில் கடந்த 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளுக்கு முதற்கட்டமாகவும், புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 2வது கட்டமாகவும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.இந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. அண்மையில், பல்வேறு கிராமப் பஞ்சாயத்துகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சிகளுடன் இணைக்கவும் செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தில் எஞ்சியுள்ள கிராமப் பஞ்சாயத்துக்களின் பொறுப்புகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ; 9.624 கிராம ஊராட்சிள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 28 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் வரையில், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகங்களை இந்த சிறப்பு அதிகாரிகள் கவனிப்பார்கள்.

Post a Comment

0 Comments