ஈரோடு மாவட்டம் , திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை யொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமிஅவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக அமைப்பு இணை செயலாளர் அன்பகம் கலை அவர்கள், திமுக துணை பொதுச்செயலாளரும் ,ராஜ்யசபா உறுப்பினருமான அந்தியூர் ப. செல்வராஜ் அவர்கள், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் அவர்கள் , ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என் .நல்லசிவம் அவர்கள் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி. சி. சந்திரகுமார் அவர்கள், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி வெங்கடாசலம் அவர்கள் . முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மாநில , மாவட்ட , மாநகர , ஒன்றிய , நகர நிர்வாகிகள் மற்றும் கூட்டணி அனைத்துக் கட்சி தலைவர்கள் , நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments