நாகையில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் ஆய்வு
நாகப்பட்டினம், பெரிய கடைத்தெரு, ஆசாத் மார்க்கெட் பகுதியில் நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் , நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் ஆகியோர் இன்று ( 21.01.24 ) ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளி மாணவர்களை சிகரெட் பழக்கத்தை தூண்டும் வகையில் சிகரெட் வடிவில் இருந்த மிட்டாய் 5 கிலோவும், அச்சடிக்கப்பட்ட காகிதத்தில் வைக்கப்பட்டிருந்த பலகாரங்கள் 10 கிலோவும், வாழைப் பழங்களை பழுக்கவைக்க பயன்படுத்திய வேதிப்பொருள் மற்றும் 2 டன் வாழைப்பழங்களும் கண்டறியப்பட்டு, கைப்பற்றி நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூபாய் இருபதாயிரம் ஆகும்.
நான்கு கடைகளுக்கு தலா ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதைப்போன்ற நிலை தொடர்ந்தால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. கீழ்வேளூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் திலீப் மற்றும் குத்தாலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சஞ்சய் ஆகியோர் உடன் இருந்தனர்.
உணவு தொடர்பான குறைபாடுகளை பொதுமக்கள் 9444042322 என்ற உணவு பாதுகாப்பு மாநில ஆணையரக வாட்ஸ்அப் புகார் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் புகார்தார் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும், புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments