மந்திரவாதி பேச்சைக் கேட்டு பக்கத்து வீட்டு குடும்பத்தையே கொன்ற கொடூரன்
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் செந்தாமரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். இந்த நிலையில் ஒரு மந்திரவாதி செந்தாமரையிடம் சென்று நீண்ட கூந்தல் கொண்ட ஒரு பெண் குடும்பத்தை நாசமாக்கி விட்டதாக தெரிவித்தார். உடனே மனைவி தன்னை விட்டு சென்றதற்கு அக்கம் பக்கத்து பெண்கள் தான் காரணம் என செந்தாமரை நினைத்தார்.
இதனால் 2019-ஆம் ஆண்டு சஜிதா என்ற பெண்ணை செந்தாமரை கொலை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த செந்தாமரை சஜிதாவின் கணவர் சுதாகரன், அவரது மாமியார் லட்சுமி ஆகியோரை கொடூரமாக வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து சுதாகரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான செந்தாமரையை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments