நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரியார் பற்றி அவதூறாக பேசினார். அதாவது பெரியார் பாலியல் இச்சை வரும்போது சகோதரி மற்றும் பெற்ற தாய் மகள் ஆகியோருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு சொன்னதாக சீமான் கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கும் பெண்ணுரிமைக்கும் சமூக நீதிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று கூறினார். இதன் காரணமாக தற்போது தமிழக பெரியார் திராவிட கழகத்தினர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில் சீமான் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமான் புதுச்சேரிக்கு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று செல்ல இருக்கிறார். இதன் காரணமாக அங்கும் பெரியார் அமைப்பினர் சீமான் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சீமானின் புகைப்படத்தை துடைப்பதால் அடித்தும், கட்சி கொடியை காலால் மிதித்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சீமான் வரக்கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 Comments