செங்குன்றம் நகராட்சியுடன் பாடியநல்லூர், நல்லூர் ஊராட்சிகளை இணைக்காதது ஏன் அரசியல் சதியா...? காழ்ப்புணர்ச்சியா...?


தமிழகம் உள்ளாட்சிகளின் விரிவாக்கத்துக்காக சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள செங்குன்றம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது சோழவரம் ஒன்றியத்தில் அடங்கியுள்ள பாடியநல்லூர் நல்லூர் இரண்டு ஊராட்சிகளும் தரம் உயர்த்தப்பட்டு புதிதாக பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் நோக்கமோ செங்குன்றத்தை இணைந்துள்ள இரண்டு ஊராட்சிகளையும் நகராட்சியில் இணைத்தால் அரசு மூலமாக கிடைக்க வேண்டிய அனைத்து நலன்களும் சலுகைகளும் கிடைக்கப்பெறும் குறிப்பாக இப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

 விரிவாக்கத்தின் காரணமாக இரண்டு ஊராட்சிகளையும் செங்குன்றம் நகராட்சியுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் எதிர்நோக்கி இருந்தனர் .இந்நிலையில் ஆட்சியாளர்களின்  சதியா அதிகாரிகளின் சூழ்ச்சியா அரசின் நிர்வாகத்திற்கு எதிராக செயல்படுகின்ற வகையில் ஒருங்கிணைந்த நகராட்சியாக இருக்க வேண்டிய செங்குன்றத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து நகராட்சியாகவும் பேரூராட்சியாகவும் பிரித்து உள்ளனர் இதனால் நிர்வாக ரீதியாகவும் மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையில் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து தரப்பு மக்களுமே ஒரே பகுதியில் வசித்து வருகின்ற சூழ்நிலையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருதரப்பு ஊராட்சி மக்களையும் இணைக்க கூடாது என்ற நோக்கத்தில் செங்குன்றம் பகுதி நகராட்சியாகவும் செங்குன்றம் பகுதியில் இணைந்து காணப்பட்ட பாடியநல்லூர் நல்லூர் வேண்டுமென்றே தனியாக பிரித்து ஊராட்சிகளை தரம் உயர்த்தி பேரூராட்சியாக பிரிக்கப்பட்டு விரிவாக்கம் செய்துள்ளனர்.

பாடியநல்லூர் நல்லூர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறிப்பாக சாலை வசதிகள் குடிநீர் வசதி பாதாள சாக்கடை திட்டம் உட்பட பல்வேறு வசதிகள் மறுக்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ஒரே பகுதியில் இரு தரப்பு மக்களும் வெவ்வேறு விதமான சலுகைகளும் நலன்களும் கிடைக்கப்பெறுவது மக்களிடையே பாகுபாடு ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது.இந்த விரிவாக்கம் அரசியல் சதியாகவும் காழ்ப்புணர்ச்சி கொண்டு ஒன்றாக இருந்த பகுதியை இரு பகுதிகளாக பிரித்து நகராட்சியாகவும் பேரூராட்சியாகவும் விரிவாக்கம் செய்ததற்கு மக்களிடையே கொந்தளிப்பு எழுந்துள்ளது.

 ஒரே பகுதியாக இருந்த இப்பகுதி மக்கள் தொழில் ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் அனைத்து துறைகளிலும் கலந்து ஒன்றாக இணைந்து செயல்பட்டு வந்தனர் இந்நிலையில்  விரிவாக்கம் என்ற பெயரில் ஒன்றாக இருந்த ஒரே பகுதியை இரண்டு பிரிவுகளாக பிரித்து அரசு நலத்திட்ட உதவிகளையும் அடிப்படை வசதிகளையும் வெவ்வேறு விதமாக பெறுகின்ற வகையில் இந்த விரிவாக்கம் ஏற்படுத்தி உள்ளதாக இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 இதனால் இப்பகுதியில் மக்கள் ஒற்றுமையாக அரசு மூலமாக கிடைக்கப்பெற வேண்டிய அனைத்து சலுகைகளும் அனைத்து நலன்களும் அடிப்படை வசதிகளும் ஒருங்கே கிடைக்க பெற்று வந்தனர் தொடர்பே இல்லாத குறிப்பிட்ட கிராமங்களான  விலங்காடுபக்கம் வடகரை அழிஞ்சிவாக்கம் கிராண்ட்லைன் புள்ளியான் தீர்த்தங்கரையம்பட்டு சென்றரம்பாக்கம் ஏழு ஊராட்சிகள் புழல் ஒன்றியத்தில் இருந்து செங்குன்றம் நகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது .

செங்குன்றத்துக்கு தொடர்பே இல்லாத ஊராட்சிகளான பொத்துர் பம்மதுகுளம்  நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது செங்குன்றத்துடன் இணைந்துள்ள பாடியநல்லூர் நல்லூர் இணைக்கப்படாதது ஏன் இது குறித்து சமூக ஆர்வலர் உயர்நீதிமன்றத்தில் அரசு நலனுக்காக ஒருங்கிணைந்து நகராட்சியாக இருக்க வேண்டிய செங்குன்றத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து பேரூராட்சியாகவும் நகராட்சியாகவும் பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

 இந்நிலையில் பாடியநல்லூரிலும் நல்லூரிலும் தங்களை இரண்டாம் குடிமக்களாக தனியாக ஒதுக்கப்படுவது ஏன் விளக்கம் காண முடியாமல் ஆட்சியாளர்கள் மீதும் அரசுக்கு எதிராக செயல்படும் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீதும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தற்போது ஆவடி மாநகராட்சியில் விரிவாக்கத்திற்காக திருவேற்காடு நகராட்சி பூந்தமல்லி நகராட்சி திருநின்றவூர் நகராட்சி உட்பட 17 ஊராட்சி கிராமங்களை மாநகராட்சியில் இணைக்கப்படுகின்றது நிர்வாக நலன் கருதி சென்னையை ஒட்டி உள்ள ஆவடியை மாநகராட்சியாக விரிவாக்கம் செய்தது போன்று செங்குன்றம் நகராட்சியில் விரிவாக்கத்தில் அரசு நலன் கருதி நிர்வாகத்திற்காக செலவினங்கள் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒருங்கிணைந்த நகராட்சியாக கொண்டுவர தயக்கம் காட்டுவது ஏன்??

ஒரே பகுதியில் நகராட்சியில் ஒரு சில அலுவலகங்களும் பேரூராட்சி சில அலுவலகங்களும் செயல்படுவதால் மக்களுக்கு குழப்பங்களும் அரசுக்கு நிர்வாக சிக்கலும் ஏற்படுகின்ற சூழ்நிலை உருவாகும் அரசுக்கு இழப்பீட்டை  அரசே ஏற்படுத்துகின்ற சூழ்நிலையை உருவாக்கப்பட்டுள்ளது பொதுநலன் கருதி  பொது மக்களின் கருத்துக்களை கேட்டு தான் பேரூராட்சியாக நகராட்சியாக பிரிக்க வேண்டும் இதை கருத்தில் கொண்டு பல்வேறு அமைப்புகள் சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் விரிவாக்கம் செய்ததை மறுபரிசீலனை செய்து  ஒருங்கிணைந்த நகராட்சியாக கொண்டு வர வேண்டும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லவும்  நீதிமன்றம் மூலமாக உரிமையை நிலை நாட்டவும் வழக்கு தொடர மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments