திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் இளம்பெண் தற்கொலை

 


அம்பத்தூரில் திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம் என்ற பகுதியில் நிவேதா(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை கடந்த 2000ம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

இவரது தாய் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய்தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நிவேதா மற்றும் அவரது சகோதரரான சந்திர பாபுவும் (25) ஒரகடத்தில் உள்ள தாய் மாமா வீட்டில் வசித்து வந்தனர். கல்லூரி படிப்பை முடித்த இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஓராண்டுக்கு முன்பாக நிவேதாவுக்கு தண்டையார்பேட்டையில் வசிக்கும் ராஜேஷ் என்பவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

அதோடு வருகிற ஜனவரி 19ம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இவர் அம்பத்தூரில் உள்ள தோழியின் வீட்டிற்கு சென்று அடுக்குமாடி குடியிருப்பின் மேல் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நிவேதாவின் சகோதரர் சந்திரபாபு புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவர் திருமணம் ஆனால் கணவர் வீட்டிற்கு சென்று வாழ வேண்டும், சமையல், வீட்டு வேலைகள் செய்ய தெரியாது போன்ற காரணத்தினால் நிவேதா கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறினார். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திய வருகின்றனர்.

Post a Comment

0 Comments