• Breaking News

    கிரிக்கெட் வீரராக வேண்டுமா..... தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் நேர்முக தேர்வு


    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் Talent Scout Programme நடைபெற உள்ளது. 13 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட Batters and Wicket keepers தேர்வு  வருகிற 01.02.2025 (சனிக்கிழமை) அன்று சுரண்டை - காமராஜர் கலை அறிவியல் கல்லூரியில் காலை 7மணி அளவில் நடைபெறுகிறது. 

    விண்ணப்ப படிவம் தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையம் (பிரிமியர் ஸ்போர்ட்ஸ் அகாடமி கணக்குபிள்ளை வலசை) வளாகத்தில் காலை 11மணி முதல் மாலை 6மணி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விருப்பமுள்ள வீரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் நகலுடன் 29/01/25 தேதி மாலை 6மணிக்குள் தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    வீரர்கள் 01/09/2003 - 01/09/2011 க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக வெள்ளை நிற சீருடை மற்றும் ஷூ அணிந்து அரைமணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு நடைபெறும் இடத்திற்கு வீரர்கள் வரவும். இந்த தகவலை தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ‌‌ஶ்ரீநாத் ராமன் தெரிவித்துள்ளார்.

    வீரர்களுக்கான தகுதிகள்: A)நடப்பில் 13 வயதிலிருந்து 21 வயதுக்குள் இருக்க வேண்டும். B) வீரர் தமிழ்நாட்டில் பிறந்தவராக இருக்க வேண்டும். C) தமிழ்நாட்டிற்கு வெளியே பிறந்தவராக இருப்பின், குறைந்த பட்சம் 1வருடத்திற்கான குடியுரிமை அனுமதி அல்லது கல்வி கற்கும் சான்றிதழை வைத்திருத்தல் அவசியம். D) வீரர்கள் சரியான கிரிக்கெட் ஆட்ட சீருடை அணிந்திருத்தல் அவசியம்.

    No comments