கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய திமுக நிர்வாகி கைது

 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நகரச் செயலாளர். இவர் அதே பகுதியில் ஒரு இ சேவை மையம் மற்றும் கடை வைத்து நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 34 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் 2019 ஆம் ஆண்டு இறந்த நிலையில் ஒரு குழந்தையுடன் பெற்றோர் பராமரிப்பில் இருக்கிறார்.

இந்த பெண்ணுடன் கண்ணன் கடந்த 2 வருடங்களாக நெருங்கி பழகியுள்ளார். இவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பலமுறை உடலுறவு வைத்த நிலையில் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததோடு தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்த அந்த பெண்ணை மிரட்டவும் செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments