ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம்


ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு குந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் பாலின அடிப்படையிலான வன்முறையை உழிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகி மோயீசன் அடிகளார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அந்தோணி அருள்பிரதீப், உதவி தலைமை ஆசிரியை ஹெலன்மேரி, சாந்தி முன்னிலை வகித்தனர்.

குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் தங்கராஜ், அருணாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர். பாலியல் குற்றங்களுக்கு 1098, மற்றும் மிரட்டல், இணைய வழி மோசடி குறித்து 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பெண் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments