பரந்தூர் விமான நிலைய விவகாரம்..... மக்களை நேரில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்

 


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் இதற்கு மாநில அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் விமான நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள் அழியும் என்பதால் மக்கள் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாகபரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி ஜனவரி 19 அல்லது ஜனவரி 20ஆம் தேதி பிறந்த ஊரில் மக்களை சந்திக்க அனுமதி கோரியும் அதற்காக போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் அனுமதி வழங்கிய பிறகு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூர் மக்களை நேரில் சென்று சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments