செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கத்தில் தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை இயக்கம் சார்பாக தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் சிட்லபாக்கத்தில் நடைபெற்ற மின்னணு கழிவுகள் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பி வைத்தல் மற்றும் கல்லூரி மாணவர்கள் விஐடி சென்னை பேராசிரியர் டாக்டர் வாசுகி, மெட்ராஸ் யூனிவர்சிட்டி டாக்டர் பிரகாஷ், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் , சவிதா கல்லூரியில் டாக்டர் அவர்களின் தலைமையிலும் சுமார் 150 மாணவர்கள் பாதகை ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இறுதியாக அனைவருக்கும் 300 மீண்டும் மஞ்சள் பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதன் மூலம் பிளாஸ்டிக் பை உபயோகப்படுத்துவதை தடுக்கும் முடியும் என்பதையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தலைமை ஏற்று நடத்தி வைத்தார் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட சிட்லபாக்கம் ராஜேந்திரன் கலந்துகொண்டு நிகழ்ச்சி துவங்கி வைத்தனர்.இதில் சங்கத்தின் சார்பாக சி.எஸ்.ராஜன், துணைத் தலைவர் பழனிச்சாமி, செயலாளர், தியாகராஜன், இணைச் செயலாளர் சுரேஷ், மனோகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு ஆதரவு தருவதற்கு பெருமளவில் லயன் சங்கத்தின் மாவட்டத் ஆளுநர் 324 ஜே ஏ.டி.ரவிச்சந்திரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
0 Comments