திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பின்னர் அதிமுக சார்பில் பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது இதனை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிருனியம் பலராமன் தலைமையில் 1345 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார் .
இதேபோன்று தேவதானம் ஸ்ரீ ரங்கநாதர் கோவில் மற்றும் சிறுணியத்தில் உள்ள அசலாத்தம்மன் ஆலயத்திலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பானுபிரசாத் கோளுர் ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 Comments