சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்...... பெட்டிகளை அதிகரிக்கும் தேதி மாற்றம்



 நெல்லை - சென்னை - நெல்லை இடையே 8 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்' ரெயில்கள் (20666/20665) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து வருகிற 11-ம் தேதி முதல் நெல்லை - சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்களில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நெல்லை - சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்களில் பெட்டிகளை அதிகரிக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments