சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு

 


சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, 159 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, விமானம் தரையிறங்க சென்னை விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பின்னர், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக, 159 பயணிகள் உயிர் தப்பினர். இதனை தொடர்ந்து, மற்றொரு விமானம் மூலம் பயணிகள் அனைவரும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானியின் துரித நடவடிக்கையை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

Post a Comment

0 Comments