ஹோட்டல் கழிவுகளால் செங்கம் மில்லத் நகர் செய்யாற்றின் கரையோரம் தூர்நாற்றம்..... கண்டுகொள்ளுமா பேரூராட்சி நிர்வாகம்


 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் போளூர் சாலையில் செய்யாற்றில் கரையோரமாக ஒரு சில ஹோட்டல் உரிமையாளர்கள் கழிவுகள் கொட்டுவதால் அந்த இடமே குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயங்கர துர்நாற்றம் ஏற்படுவதால் அப்பகுதியில் வாழும் பொது மக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். 

உடனடியாக செங்கம் பேரூராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை வேடிக்கை பார்ப்பாரா..? என பொதுமக்கள் புலம்பி தவிக்கின்றனர்.

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்தியாளர் S. சஞ்சீவ் தொடர்புக்கு.9344472338

Post a Comment

0 Comments