தேனி மாவட்டத்தில் உள்ள அழகர்சாமிபுரத்தில் விவேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி பொறியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேக்கிற்கு குழு தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதல் பணி சுமையால் மன உளைச்சலில் இருந்த விவேக் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
கடந்த மூன்றாவது தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விவேக் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் விவேக் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவேக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments