கும்மிடிப்பூண்டி அடுத்த எஃகுமதுரை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீபிரியா மகேந்திரன் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எஃகுமதுரை ஊராட்சி தமிழகத்தின் முதல் ஊராட்சியாக உள்ளது இதன் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் அதிமுகவை சேர்ந்த ஸ்ரீபிரியா மகேந்திரன்.  இவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று எஃகுமதுரை ஊராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்ததோடு   ஒரு லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து கடந்த ஐந்தாண்டுகளாக ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றார் இதேபோன்று அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரோஜா ரமேஷ் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றார்.

இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முனுசாமி வார்டு உறுப்பினர்கள் சசிகலா பிரவீன் விஷ்ணுகுமார் கோவிந்தம்மாள் ரத்தின ஐயா சொர்ணா கிரி பாபு ஹரி ஊராட்சி செயலாளர் முருகேசன் முன்னாள் ஊராட்சி செயலாளர் சோபன்பாபு திமுக பிரமுகர் டிசி மஸ்தான் கிராம பெரியோர்கள் மற்றும் கிராம பொது மக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments