திருமணத்திற்கு மறுத்த காதலனை கத்தியால் குத்திய காதலி


 கர்நாடக மாநிலத்தில் உள்ள குடுக்கனஹள்ளி பகுதியில் மனுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் மனு குமாரும் அதே பகுதியைச் சேர்ந்த பவானி என்ற பெண்ணும் கல்லூரியில் படிக்கும்போதே காதலுக்கு வந்தனர். கடந்த சில மாதங்களாக திருமண பேச்சுவார்த்தை நடந்ததால் மனு குமார் தனது காதலியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். பவானி பலமுறை தனது காதலனை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட இரவு 12:30 மணிக்கு மனுகுமாருக்கு அவரது நண்பர்கள் போன் செய்தனர். அப்போது பவானியும் அங்கு சென்றுள்ளார். காதலர்கள் தனி அறையில் அமர்ந்து காதல், திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது மனுகுமார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பவானி கத்தியால் தனது காதலரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த மனு குமாரை நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பவானியை கைது செய்தனர்.

Post a Comment

0 Comments